கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ராமுவுக்கு ஓசூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் தற்போதைய ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி இருந்து வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை அப்பதவியில் இருந்து விடுவித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்த ராமுவுக்கு புதிய மாவட்ட செயலாளர் பதவியை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்ற தெரிவித்து வாழ்த்துக்களைப் பெற்றார்

இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு வந்த புதிய மாவட்ட செயலாளர் ராமுக்கு சூளகிரி பகுதியில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர் அவருக்கு சால்வை மற்றும் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஓசூருக்கு வந்த அவருக்கு அதிமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு சால்வை மற்றும் பூங்கொத்துகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, அம்பேத்கர் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து ராயக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு கட்சியினரோடு சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய மாவட்ட கழக செயலாளர் ராமு தன்னை புதிய மாவட்ட கழக செயலாளர் நியமனம் செய்த கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தார் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்,

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் கலைச்செல்வி ராமன், மாவட்ட பொருளாளர் மல்லையா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரகாஷ், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், வர்த்தகரணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பிரசன்னா, ஒன்றிய செயலாளர்கள், செல்வம், மாதேஷ், பாலசுப்பிரமணியம், சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி, பாபு வெங்கடாசலம், முருகன், ஜெயபால், தென்கனிக்கோட்டை நகர செயலாளர் பழனிசாமி, கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சு, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ரங்கநாத், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் கே டி ஆர் என்கின்ற திமிராஜ், பேரவை மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணப்பா,ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன், சங்கர், லக்ஷ்மி பிரேமகுமார், கலாவதி சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் நாராயண ரெட்டி, நந்தகுமார், சரஸ்வதி நடராஜன், ரமேஷ், பக்ஷு பாய், முத்துராஜ், 33 ஸ்ரீனிவாசன் வட்டக் கழக செயலாளர், மதியழகன், விஜயகுமார், மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed