மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் அவர் வருவதற்கு முன்பாக அவரின் பிரச்சார வாகனம் முன் சென்று பிரச்சாரம் செய்யும் அதனை பிரபு என்ற வாகன ஓட்டி இயக்கி வந்தார்.

இந்நிலையில் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த சூழ்நிலையில் அங்கு போதையில் வந்த நபர் வாகனத்தின் சாவியை பிடுங்கியும் வாகனத்தில் வந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் கூச்சலிட்டார் இதனை அறிந்து கார் சாவியை கேட்டு வந்த அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையின் பெயரில் ஆண்டி என்பவர் மகன் முருகபாண்டியை கைது செய்து மேலும் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

இதனை அடுத்து தனிச்சியம் பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்த மாணிக்கம் தனது பிரச்சாரத்தின் போது தோல்வி பயத்தில் திமுகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் ஏற்கனவே தனக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம்
புகார் கொடுத்துள்ளதாகவும் பிரச்சாரத்தில் கூறினார்.

அவரது மனைவியும் தங்கள் குடும்பம் முழுவதும் மக்கள் நலனுக்காகவே செயல்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க மறுப்பதாக கூறிய அவர் மக்கள் நலனுக்காக குடும்பத்துடன் உயிரை விடவும் தயாராக இருக்கிறோம், என்று உருக்கமாக பேசினார்.

வாடிப்பட்டி தனிப்பிரிவு காவலர் மீது ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் சமுதாயம் சார்ந்த செயல்படுவதால் தேர்தல் ஒரு தலை பட்சமாக நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய அதிமுக வேட்பாளர் மாணிக்கம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கும் காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் அலுவலரை கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed