மதுரை மாவட்டம் சோழவந்தான்
தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய வெங்கடேசன் எம் எல் ஏ தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பெண்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் பெண்கள் வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு உற்சாக வரவேற்பு வழங்கி வருகின்றனர் இன்று சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் டபேதார் சந்தை சமயநல்லூர் சித்தாலங்குடி வைரவநத்தம் விட்ட குளம் ஆகிய கிராமங்களில் தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

சித்தாலங்குடி கிராமத்திற்கு சென்ற வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனபால் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் அங்கே பொது மக்களிடம் திமுக வேட்பாளர் வெங்கடேசன் பேசுகையில் தொடர்ந்து தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என வாக்குறுதி வழங்கினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் சி பி ஆர் சரவணன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனபால் வெங்கடேசனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இப்போது அவர் கூறுகையில் சோழவந்தான் தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் மற்றும் கிராமத்துக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வந்தவுடன் செய்து கொடுப்பார் அவருக்காக கழக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி /. 8939476777
