திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதிமுக,தவெக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் இயங்கும் இந்திய குடியரசு கட்சி சார்பில் பொன்னேரி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது அவருடைய நான்கு வயது மகன் ஜிட்டன் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை உண்டியலோடு ஊர்வலமாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். அங்கு வேட்பு மனு வழங்கிய பின் வேட்பு மனுக்கான டெபாசிட் தொகையினை உண்டியலோடு தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.

அப்போது ரவிச்சந்திரன் உண்டியல் பணத்தை தனியாக எடுத்து வரும்படி கூறினார். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்டியலை உடைத்து அதிலிருந்து சில்லறை தொகை ஐந்தாயிரம் ரூபாய் எடுத்து டெபாசிட்டாக வழங்கினார். இதனை அரை மணி நேரம் எண்ணி சரிபார்த்த பிறகு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் அவருடன் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் இரா அன்புவேந்தன், மாநில பொது செயலாளர் சின்னக்காவணம் தன்ராஜ்,தலைமை நிலைய செயலாளர் கல்பனா,மூத்த வழக்கறிஞர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
