திருச்சி டவுன் ரயில் நிலையத்திற்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் சென்று பார்க்கையில்,
இறந்த நபர் பாசிப்பச்சை அரைக் கை சட்டை, கருப்பு நீளம் கலந்த கோடு போட்ட கைலியும், பிரவுன் கலர் வைக்கிங் பாக்கெட் வைத்த டவுசர் ஜட்டி மற்றும் கருப்பு அரை ஞான் கயிறு கட்டி இருந்ததாகவும் இதைத் தவிர பிரேதத்தின் மீது வேறு ஒன்றும் இல்லை எனவும் இறந்து போன நபர் இன்னார் என பெயர் விலாசம் தெரியாதவராக உள்ளார்.
இறந்த நபர் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரப்படாத சூழலில் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் விஜயலட்சுமி உடலை நல்லடக்கம் செய்வதற்காக உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் குழுமிக்கரை மயானத்தில் இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் விஜயலட்சுமி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் குளத்தூர் மணப்பாறை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயிலில் அடிபட்டு இறந்த பெண் உடலை, நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார்…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குளத்தூர் மணப்பாறை ரயில் நிலையங்களுக்கு இடையே பெயர், விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் விசாரித்ததில், இறந்த பெண் பெயர், விலாசம் தெரியாதவர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேலையும், ரோஸ் நிற ரவிக்கையும் அணிந்திருந்தார்.
இறந்த பெண் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக, உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் ராஜேஸ்வரி தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் குழுமிக்கரை மயானத்தில் இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் ராஜேஸ்வரி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.
எதிரொலி / 8939476777
