சென்னையில் தவெக தலைவரின் பிரச்சாரத்தின் போது காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், ஆனால் திருச்சியில் காவல்துறையின் செயல்பாடுகள் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தது என பாராட்டு.-திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி ;

தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்புமனுத் தாக்கல் இன்று மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்று முடிந்தது. திருச்சி முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகம், தமிழகம் முழுவதும் ஒரு பெரிய மாற்றத்திற்கான அலை வீசுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக, செல்லும் இடமெல்லாம் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ‘விசில்’ சின்னத்திற்கே வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும், வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் இதனை எதிரொலிக்கும்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்திற்கு (FCRA) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்மல் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இந்தச் சட்டம் ஒருதலைப்பட்சமாக சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான ஏழை மாணவர்களுக்குக் கல்வி வழங்கி வரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை முடக்கும் செயலாக இது உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பிறகு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் தவெக அனுமதிக்காது.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் தலைவரின் பிரச்சாரத்தின் போது காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், ஆனால் திருச்சியில் காவல்துறையின் செயல்பாடுகள் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தது.

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு அரண்களை அமைப்பதில் அரசு இயந்திரம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரும் மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றும், அப்போது கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மக்கள் தங்களது உழைப்பால் மட்டுமே முன்னேறி வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம் தொகுதி பல ஆண்டுகளாக மாற்றமின்றி அப்படியே உள்ளது. அருகில் விமான நிலையம் இருந்தும், இப்பகுதி தொழில் ரீதியாக வளர்ச்சி அடையவில்லை. உதாரணமாக, சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழில் மூலம் சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவர்களுக்குத் தேவையான மானியம், மூலப்பொருள் உதவி மற்றும் ஏற்றுமதி வசதிகளை அரசு செய்திருந்தால், இந்த வேலைவாய்ப்பு ஒரு லட்சமாக உயர்ந்திருக்கும். ஆனால், தமிழக முதல்வர் வெளிநாடுகளில் முதலீடு தேடுவதில் காட்டும் ஆர்வத்தை, இங்கிருக்கும் தொழில்களை ஊக்குவிப்பதில் காட்டுவதில்லை.

மேலும், பிரதமர் மோடியின் வருகை குறித்துப் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் ஆன்மீக மற்றும் தமிழ் உணர்வுகளைப் பேசுவது மக்களிடம் எடுபடாது என்றார். அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் திமுகவும் பாஜகவும் சேர்ந்து அரசியல் செய்வதாக அவர் கூறினார்.

தேர்தல் பரப்புரையின் போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே இடையூறு செய்ய அனுப்பப்படுகிறது, இது போன்ற செயல்களைக் காவல்துறை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என நாவை காயினை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் கூறினார்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *