மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில், மருது மகால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை தபால் ஆபீஸ், பசும்பொன் நகர், காமராஜர் சாலை, இபி ஸ்டாப் காவல் நிலையம் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளது.

குறிப்பாக, வட்ட பிள்ளையார் கோவில், மருது மஹால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் சிலை ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்து நிறுத்த இடங்களில் நிழற்குடைகள் இல்லாததால் ஐந்து ஆண்டுகளாக பொதுமக்கள் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

இது குறித்து, கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் உடனடியாக நிழற்குடைகள் அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். வெற்றி பெற்ற பின்பு நிழற்குடை அமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,

அதனை தொடர்ந்து 2024 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரித்த தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிழற்குடைகள் அமைத்து தரப்படும் என வாக்குறுதி கொடுத்து சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிய உள்ள நிலையில் தற்போது வரை நிழற்குடைகள் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் இடம் கேட்டபோது நிழற்குடைகள் அமைப்பதற்கு இட வசதி இல்லை என காரணம் கூறுகின்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், பேரூராட்சி சார்பில் அதற்கும் உரிய அனுமதி தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பேரூராட்சி கவுன்சிலர் அமைத்து தர முயற்சி செய்த நிழற்குடை அமைக்க முடியாமல் போனது.

தற்போது வெயில் காலம் தொடங்கி ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை இதன் காரணமாக ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் கூட்டம் கூட்டமாக பேருந்துக்காக காத்துக் கிடைக்கின்றனர்.

கூடுதலாக குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் வயதான பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் வெயிலில் காத்திருப்பது அந்த பகுதியில் செல்பவர்களை கடும் மன வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு அதற்கான தீவிர பிரச்சாரமும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் உடனடியாக நிழற் குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப் போவது உறுதி அதை நம்பி மக்களும் வேட்பாளருக்கு வாக்களிக்க போவதும் உறுதி ஆனால் மக்களின் நிழற்குடை கோரிக்கை மட்டும் நிறைவேற போகிறதா அல்லது மீண்டும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட போகிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சோழவந்தான் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed