மதுரை மாவட்டம் சோழவந்தான் நாடார் தெருவில் அமைந்திருக்கும் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிவ ஸ்ரீ கண்ணன் அர்ச்சகர் சண்முகவேல் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது ‌ வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் பூச்சொரிதல் விழா சக்தி கரகம் எடுத்தல் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, புதன்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்தல் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து வழிபாடு மேற்கொண்டனர் தொடர்ந்து மாலை அக்னி சட்டி எடுத்தல் மாவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. தொடர்ந்து கருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கேடயத்தில் உள்வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ரிஷப வாகனத்தில் நகர் திருவீதி உலா முளைப்பாரி ஊர்வலத்துடன் நடைபெறுகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை 19 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா குழுவினர் திருப்பணி குழு செயற்குழு உறுப்பினர்கள் நாடார் மகளிர் சங்கம் நாடார் இளைஞர் அணி ஆகியோர் செய்து வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed