மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி, பட்டூர், சேக்கிபட்டி, கம்பூர், புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் காணப்படுகிறது.

ஏற்கனவே, இரவு நேரங்களில் சாலை விபத்தில் இறக்கும் தேவாங்குகளை வனத்துறையிடம் குறிப்பிட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆவணப்படுத்தி வந்தோம். அதன் பின்பு அமெரிக்கன் கல்லுரி முதுநிலை விலங்கியல் மாணவர் ஜஸ்வின் மேஷாக் ஸ்மைல் 4 மாதங்கள் கள ஆய்வு செய்து 194 தேவாங்குகளை ஆவணப்படுத்தினார்.

அதற்கு பின்பு கேசம்பட்டி நெடுஞ்சாலையில் வனத்துறையால் இரண்டு தேவாங்குகள் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
இப்பொழுது கேசம்பட்டி 1,பட்டூர் 1 தேவாங்குகள் சாலை விபத்தில் இறந்துள்ளது. ஏற்கனவே இயற்கை அழிப்பு,காலநிலை மாற்றம் என அதன் வாழ்வியல் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பு நிலையில் சாம்பல் நிற தேவாங்குகள் உள்ளது.

பல்லுயிர் சூழலில் சாம்பல் நிற தேவாங்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பாதுகாப்பதற்கு இந்திய அரசு 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுள்ளது. இந்தியாவிலே முதல் சாம்பல் நிற தேவாங்குகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள கரூர்-திண்டுக்கல் எல்லைப்பகுதியில் உள்ள கடவூர் அய்யலூர் பகுதியில் 11,806 ஏக்கரில் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதை போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, பட்டூர்,கம்பூர்,புலிப்பட்டி,மேலவளவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கேசம்பட்டியை தலைமை இடமாக கொண்டு அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் சரணாலயம் இரண்டாவதாக அமைப்பதுதான் பல்லுயிர் சூழலை பாதுகாக்க முடியும்.

இதை காலநிலை மற்றும் வனத்துறை தலைமை செயலர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்திகள் : காலமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed