கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம்,
மிட்ட ஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தில் யுவராஜ் பிரதர்ஸ் சார்பில், 7 -ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம். கூரப்பட்டி, ஊத்தங்கரை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளது.

நாக் அவுட் என்ற அடிப்படையில் நடைபெற உள்ள இந்த போட்டியை காங்கிரஸ் கட்சியின் பொதுத் குழு உறுப்பினரும், முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மிட்ட ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவருமான எல் .சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளை துவக்கி வைத்து கிரிக்கெட் வீரர்களை கெளவித்தார்.

மேலும் மூன்று நாள்கள் நடைப்பெறும் இந்த கிரிக்கட் போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு ஊக்கப்பரிசுகளும், சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777
