திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியின் முதுகலை வரலாற்றியல் துறையில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கல்லூரி தொடங்கப்பட்டு 60-வது ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வினை முன்னிறுத்தியும் கல்லூரி வளாகத்தில் “வரலாற்றுச் சதுக்கம்” நினைவுச்சின்னம் முதல்வர் முனைவர் ம.ச. தில்லைநாயகி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் பேரா.மா.மாறவர்மன் அவர்கள் முன்னிலை வகித்தார். துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முதுகலை வரலாற்றியல் துறையில் நடைபெற்ற இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் முதல் நிகழ்வாக., தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வை மத்திய பிரதேச விவேகானந்தாபல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.ஏ.மணிக்குமார் துவக்கி வைத்து விழா பேருரையாக, ” தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இத்தலைப்பானது இந்தியாவின் சிறப்பியல்புகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது என்றும், தமிழ்நாட்டின் வரலாற்றுத் தொன்மைகளை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் கலங்கரை விளக்கமாக” இப்பன்னாட்டு கருத்தரங்கம் அமையும் எனப் பேருரை ஆற்றி தொடங்கி வைத்தார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.சாலமன் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “பன்னாட்டு உறவுகளில் இந்தியாவின் பெருமைகளும் தலைமைத்துவ ஆளுமைகளுமே இந்தியாவின் வலிமை” என்று எடுத்துரைத்தார். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டு, “இரத்தினச் சுருக்க நூல்” வெளியிடப்பட்டது. இவ்விழாவில் வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் மா.மாறவர்மன் அவர்கள் வரவேற்றுப் போனார். விழாவில் முனைவர் ஜி.கே. ஜேசுபாதம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இரண்டாம் நாள் அமர்வாக, டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர். முனைவர் சுசாந்தகுமார்பேக் அவர்கள்
உலக அளவில், ஓங்கி நிற்கும் இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் பண்பாட்டுப் பெருமைகளும் என்னும் சீர்மிகு தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் மூன்று அமர்வுகள் நடத்தப்பெற்றன . நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பல்வேறு அறிஞர்களின் முன்னிலையில் ஆராய்ச்சியாளர்கள் விவரித்தனர். சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ. 5000/-ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு விழாவில், அலகாபாத் ஜி.எஸ்.டி ஆணையர் திரு.ராஜுசக்திவேல் IRS அவர்கள், “இன்றைய பொருளாதாரத்தில், நாம் எதிர் கொள்ளும் சவால்கள், அதில் உள்ள இடர்பாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள், இதில் இளம் தலைமுறையினரின் பங்களிப்புகள்” ஆகியவற்றை குறித்து நிறைவுரை ஆற்றிச் சான்றிதழ்கள் வழங்கினார்.

முதுகலை வரலாற்றியல் துறை- இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக, ஐந்து தீர்மானங்களாக “உலக அமைதியை உறுதி செய்யும் ஈரான் – இஸ்ரேல் & அமெரிக்கா, ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளின் போர்களை நிறுத்துவதற்கு,போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல்”,

உலக அமைதியை உறுதி செய்வதற்கும், அத்தகைய செயல்முறைகளில் இந்தியாவுக்கு அதிக பங்கை வழங்குவதற்கும் உலகை மறுசீரமைக்க அனைத்து சர்வதேச சமூகங்களும் பணியாற்ற வேண்டும்”,

“புதிய உலக புதுமையான பொருளாதார மன்றத்தை” கொண்டு வருவது, சமத்துவம் மற்றும் நேர்மையை உறுதி செய்வது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இடமளிக்கும் வகையில் உலக சமூகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்”,

“சுயாட்சி, சுதந்திரம் மற்றும் உச்ச உயர்கல்வி அமைப்பை நிலை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தல்”,

உலக அமைதி மற்றும் நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக்கிலிருந்து விடுபட்ட வாழ்க்கை மற்றும் உலக மக்களிடையே ஜனநாயக விழுமியங்களை உறுதி செய்ய வலியுறுத்தல்”, உள்ளிட்ட தீர்மானங்கள் கருத்தரங்க இயக்குநர் முனைவர் மா.மாறவர்வன் அவர்களால் முன்மொழியப்பட்டு, அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed