ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் அதிக அளவு பக்தர்கள் வருவதால் கோவில் வளாகத்தில் பெண் போலீசார்
விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரிலும், டிஎஸ்பி பாலசுந்தரம் ஆலோசனையின் பேரிலும், பெண்கள் மற்றும் பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டும் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும், பெண் குழந்தைகளுக்கு இடையூறு என்றால் உதவி எண்களை அழைக்க வேண்டும், மேலும், குழந்தை திருமணம் நடைபெற்றால் அது பற்றி உடனடியாக தகவல் கொடுத்து குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும், பெண் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போலீசார் ஈடுபட்டனர். மேலும், அவசரகால உதவி எண்களை பெண் பக்தர்களுக்கு விரிவாக பெண் போலீசார் எடுத்துக் கூறினர்
செய்திகள் சுந்தரராஜன் & சிவன்ராஜ் எதிரொலி / 8939476777
