கிருஷ்ணகிரி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியின் 30- ஆண்டு விழா அன்னை கண்ணம்மாள் தர்மராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதாராணி மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீனி திருமால் முருகன் கலந்துக்கொண்டு பள்ளியின் ஆண்டு விழாவினை குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.அவர் பேசுகையில் ;


பள்ளி ஆண்டு விழாக்களை நடத்தி மாணவ, மாணவிகளுக்கு இடையே திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த பள்ளி ஆண்டு விழாக்களை நடத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இதில் குறிப்பாக மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மட்டும் இருந்தால் போதாது பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கின்றனர் என்று கண்காணிக்க வேண்டும். அதேபோல் குழந்தைகள் அழுகிறது என்பதற்காக ஒரு போதும் செல்போன்களை கொடுத்து விடாதீர்கள், இதில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்திட வேண்டும், அப்போதுதான் ஒரு சிறந்த மாணவர்களை சமுதாயத்தில் உருவாக்க முடியும்,

ஆகையால் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனித்தால் மாணவர்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் என்று குறிப்பட்டார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த பள்ளி ஆண்டு விழாவின் போது இன்று அனைத்து தரப்பட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வரும்
சோசியல் மிடியாவின் பயன்பாட்டினால் இன்றைய இளைய தலைமுறையினர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகமும் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருள்சகோதரி ஜெசிந்தா முத்தையா, கராத்தே மாஸ்டர் மாரியப்பன், கல்வியாளர்களான ஜாக்கப், வெங்கடசாமி உள்ளிட்ட, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed