மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார் இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்று வருகிறார். இவர்களது மகள் ப.லோகபிரியா என்பவர் சென்னையில் உள்ள பட்டய கணக்காளர் மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

தேர்வில் தேசிய அளவில் முதலிடம் :

இந் நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தால், (ICAI) நடத்தப்படும் சி.ஏ. (Chartered Accountant) சார்பில், அடிப்படை தேர்வு நடந்தது. அதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 21 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், லோக பிரியா 400க்கு 366 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து, ப.லோக பிரியா கூறும் போது; ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் ஒரு ஆசை இருக்கும், அந்த வகையில் பட்டய கணக்காளராக வேண்டும் என்று எனது பள்ளி பருவத்தில் இருந்தே
ஆசை இருந்தது.

ஆகவே தான், நான் பிளஸ் 2 தேர்வு முடித்த பிறகு சென்னையில் உள்ள பட்டய கணக்காளர் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்பது உறுதியாக இருந்தேன்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் தேர்வு எழுதிய நிலையில், 21 ஆயிரம் தேர்ச்சி பெற்றனர். அதில், தேசிய அளவில் முதலிடம் என்பது மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறது. எனது பெற்றோர்கள் மற்றும் எனது சகோதரி காவியா ஆகியோர் கொடுத்த ஊக்கமும், உறுதுணையும் தான் படிப்பதற்கு உதவியாக இருந்தது. ஆகவே, விடா முயற்சியாக பட்டய கணக்காளர் பயிற்சி பெற்றேன், என கூறினார்.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed