கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி பெரியசாமி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார். கோரிக்கைகளை விளக்கி முன்னாள் எம்எல்ஏவும் அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான தி. ராமசாமி பேசினார். மாதர் சங்க மாவட்ட பொருளாளர் முத்துலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் தியாக சாந்தி, தனுஷ்கோடி, பேரூராட்சி கவுன்சிலர் நல்லதாய், தாலுகா செயலாளர் சுப்புலட்சுமி, யூனியன் கவுன்சிலர் பொன்மாரி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து முத்தாலம்மன் திடல் மைதானம் முன்பாக வந்து கேஸ் சிலிண்டருக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டமும் செய்தனர். தாலுகா தலைவர் முப்புடாதி நன்றி கூறினார்.
செய்திகள் : சுந்தரராஜன் & சிவன்ராஜ் / எதிரொலி / 8939476777
