ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்வில், பேராசிரியர் எபிஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க கருப்பொருள் குறித்து வரலாற்றுத்துறை தலைவர் ஜெகநாத் கருத்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் கே.ஆர். நந்தாராவ், கல்வி அலுவலர் இரா. நடராஜன், காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் மற்றும் சிவகாசி, AAA தொழில்நுட்பக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இன்றைய காலகட்டத்தில், காந்தியத்தின் தேவை குறித்தும் அகிம்சை, சத்தியாகிரகம் குறித்தும் மாணவ மாணவயருக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்வில், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையமும் மதுரை காந்திய நினைவு அருங்காட்சியகமும் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடங்கிய ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனர். எதிர்வரும் காலங்களில் கல்லூரி மாணவர்களுக்கு காந்திய சிந்தனையின் அடிப்படை தத்துவத்தை அவரவர் வாழ்க்கையில் கடைபிடிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.
காந்திய சிந்தனை சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பிற்கான முக்கியத்துவத்தையும் அனைவரும் காந்திய சிந்தனை கல்வியை படித்து வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. நிறைவாக பேராசிரியர் கந்தசாமி நன்றி வழங்கினார்.
செய்திகள் : சுந்தர்ராஜன் & சிவன்ராஜ்/ விருதுநகர் / எதிரொலி / 8939476777

