மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி குடியேறும் போராட்டம் நடைபெற்றது கடந்த 30. 10. 2025 அன்று சோழவந்தான் குருவித்துறை ராயபுரம் பகுதிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரப்பெற்ற மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமை தாங்கினார்.

மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு நிர்வாகிகள் கந்தவேல் கருப்புசாமி விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர் குடியேறும் போராட்டத்தின் போது தாலுகா அலுவலக வாசலில் அடுப்பு வைத்து உணவு சமைத்து அங்கேயே தங்கி இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் வரை தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed