கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு கலைக்கல்லூரி அருகே முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் கட்டிடத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்,
முன்னதாக திட்டக்குடி தொகுதியில் கூட்டத்தை முடித்துவிட்டு விருத்தாசலத்தில் ரோட் ஷோ நடத்தினார் இதில் வழி நெடுங்கிலும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்,


கடைவீதியில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் வீட்டின் அருகே நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வி கணேசன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.


எதிரொலி / 8939476777
