கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 15.09.2026 ஆம் நாளன்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் 2026-27 ஆம் கல்வியாண்டின் சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா கல்லூரி முதல்வர் மரு.க. சத்யபாமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் முதல்வர் அவர்கள் தெரிவித்ததாவது ,

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல் என்னும் திருவள்ளுவருடைய திருக்குறள் பொருளுக்கு ஏற்ப நோய் இன்னது என்று ஆராய்ந்து, நோய் காரணம் ஆராய்ந்து, அதை தணிக்கும் வழியை ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக செய்ய வேண்டும் என்ற குரலுக்கு ஏற்ப மருத்துவ மாணவர்கள் தமது ஐந்தரை ஆண்டு காலம் மருத்துவ படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் அனைவரும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிடுபவர்களாகவும் உள்ளனர்.

அவ்வாறு உள்ளதால் மருத்துவ மாணவர்களுக்கு தங்கள் படிப்புக்கு மிகுந்த பயனளிக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நல்ல மருத்துவராக தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிக்கும் இம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கத்தக்கவாறு படிப்பறிவு பெற வேண்டும் எனவும் சிறந்த ஒழுக்கத்துடனும் நன்னடத்தைகளுடனும் நடந்து கொள்ள வேண்டும் பல்கலைக்கழக அளவிலும் மாநில அளவிலும் முதன்மையான மாணவர்களாகவும் தேர்ச்சி பெற்று திகழ வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் தெரிவித்துள்ளவாறு, ஒரு இந்திய மருத்துவ மாணவர் என்பவர் நல்ல மருத்துவர், நல்ல தலைவர், மருத்துவக் குழுவில் நல்ல உறுப்பினர், நல்ல தொடர்பாளர், நல்ல தொழில்முறையாளர், வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவர், நல்ல சிந்தனையாளர் நல்ல ஆராய்ச்சியாளர் என்பதோடு ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் என்னும் திருக்குறளுக்கேற்ப தங்களின் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மருத்துவ மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

பெற்றோர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மாணவர்களின் முதல் ஆசிரியர் பெற்றோர்தான் எனத் தெரிவித்து இரண்டாவது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோராக இருந்து காத்திடும் வகையில் இம்ம மருத்துவ கல்லூரி மருத்துவ ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

தொடர்ந்து *மருத்துவ படிப்பில் 2026-27 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற்ற 127 மருத்துவமாணவர்கள் வெள்ளை அங்கி அணியும் விழாவும், வெள்ளை அங்கி அணிந்து பாரம்பரியமாக எடுக்கும் உறுதி மொழியான ஹிப்போ கெரெடிக்ட் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இவ்விழா கல்லூரி முதல்வர் அவர்களின் தலைமையிலும் துணை முதல்வர் ஆர்.பி.சாத்விகா மருத்துவ கண்காணிப்பாளர் பி. சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு.எம். செல்வராஜ், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.கே.எஸ். தினேஷ், பேராசிரியர்கள் மருத்துவர் மாரிமுத்து பொது மருத்துவம், மருத்துவர் பத்மலதா மகப்பேறு துறை, மருத்துவர் மகேஷ்ராம் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவர் உமாமகேஸ்வரி உயர்வேதியல் துறை, மற்றும் இணை பேராசிரியர்கள் மரு.சரவணன் சமூக மருத்துவ துறை,மரு. உசாமுதீன் உடலியங்கியல் துறை, மரு.கவிதா குழந்தைகள் நலத்துறை, மரு. சந்தோஷ்குமார், மற்றும் மரு.மாலதி அறுவை சிகிச்சை துறை, மரு.வாணி ஸ்ரீ மனநல மருத்துவ துறை , மரு. விஜய் ஆனந்த் மயக்கவியல் துறை, மரு.சுதாகர் கண் மருத்துவத்துறை மற்றும் நிர்வாக அலுவலர் திரு எஸ்.கே. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மரு பாலாஜி, மரு.சுபதா, மரு அனுராதா மரு கல்பனா மரு கீதா மரு.கேசவன் மரு பவள குறிஞ்சி ஆகியோர் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாகவும் விழா ஏற்பாட்டாளராகவும் கலந்து கொண்டு செயல்பட்டனர் ..

இந்நிகழ்ச்சியின் நிறைவாக மருந்தியல் துறை, இணைப்பேராசிரியர் மரு.அமுதன் அரவிந்த் அவர்கள் நன்றி கூறினார்கள்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed