திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, அவைகள் அனைத்தும் சுமார் 20 தெருக்களில் நிறுவப்பட்டு உள்ளன, அந்த தொழிற்சாலைகள் அனைத்தும் இரவும், பகலுமாக இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகளில், நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான மின் கம்பங்களில் இருக்கக்கூடிய மின் விளக்குகள் இரவு நேரங்களில் பல மாதங்களாக எரிவதில்லை.

அதிலும், அந்த தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக இருந்து வருகின்றன. இரவு நேரத்தில் இந்த சாலைகளில் செல்லக்கூடிய பெண்கள், முதியோர், இரவு பணிக்கு வரக்கூடிய தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் தெருவிளக்கு எரியாததால் மேடு, பள்ளம் தெரியாமல் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வரக்கூடியவர்கள் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால், சாலைகளில் இருக்கக்கூடிய பள்ளங்கள் தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகின்றன.

வெகுகாலமாக, தெரு விளக்குகள் எரியாத 5 வது பிரதான சாலையில் தான், சிட்கோ தொழிற்பேட்டை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகாரை பதிவு செய்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர். சம்பந்தப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை உயர் அதிகாரிகள் இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு, தெரு விளக்குகள் நிரந்தரமாக எரிய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன தொழிலாளர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள் : கோதை ஜெயராமன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed