ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து தினமும் பெரிய மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது.

பூக்குழி திருவிழா முன்னிட்டு தினமும் கோவிலுக்கு ஆயிரம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை நீண்ட வரிசையில் பெரிய மாரியம்மன் சாமி தரிசனம் செய்ய சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.

நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களை காணலாம்…

செய்திகள் : சிவராஜ் & சுந்தர்ராஜன் / விருதுநகர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed