ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக வரக்கூடிய ஒரு புன்னிய திருத்தலமாகும், ஆண்டாள் அவதரித்த திவ்யசேதத்தில், 108 இல் ஒன்று இந்த திவ்ய தேசம், ஆகவே, வட மாநிலத்தில் இருக்கக்கூடிய பக்தர்களும் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வந்து சொல்வது வழக்கம்.

இந்த கோயிலில், வடபத்ரா சாயி என்ற பெரிய பெருமாள் சேத்ர நாயகன் இவர் இந்த கலியுகத்தின் முன்பு காலைமேனி அசுரனை வதம் செய்து அந்த அசுரனை சக்கரத்தால் வதம் செய்து கழுவிய பின்னர், இவ்விடத்தில் சர்க்கரத் தால்வரை வைத்ததால், இங்கு உள்ள குளத்திற்கு சர்க்கர குளம் என்று பெயர் வந்தது.

இந்த குளம், ஆண்டாள் சன்னதிக்கு எதிரில் உள்ள குளம், இது புண்ணிய சேர்த்தர குளம் ஆகும், இக்குளத்தில் புனித நீராடினால், பித்ருக்கள் சாபம் நீங்கும் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

பக்தர்கள், இந்த கோயிலுக்கு வந்தால் புனித நீராடக்கூடிய இந்த குளம், சுமார் 3,000 ஆண்டு பழமையான குளமாகும், இப்போது இந்த சர்க்கரை குளமானது, சமூக அக்கறையும், பொறுப்பும் இல்லாத மக்கள், புனித நீராடக்கூடிய இந்த குளத்தை, மாசு அடைய செய்யும் வகைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை இந்த குளத்தில் கொட்டுவதால், தற்போது சர்க்கர குளம் விஷம் கலந்த குளமாக மாறி வருகிறது. இந்த சக்கர குளத்தை புனரமைக்க அறநிலையத்துறையும், நகராட்சி நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி, பக்தர்கள் புனித நீராட கூடிய இந்த குளத்தை பாதுகாத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்களும், கோயிலுக்கு வரக்கூடிய பக்த பெருமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

செய்திகள் : சிவராஜ் மற்றும் சுந்தர்ராஜன் / ஸ்ரீ வில்லிபுத்தூர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed