திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அடங்கிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இளைஞர் அணி நிர்வாகி கதிரவன் வரவேற்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை.நா. செல்வசேகரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.


சுமார் 800 பேருக்கும் மேல் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் சுவையான பிரியாணி விருந்து நடைபெற்றது. இதில் சோழவரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஆண்டார்குப்பம் ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் : லோகநாதன் / பொன்னேரி / எதிரொலி / 8939476777
