பொன்னேரி மக்கள், பொன்னேரியில் இருந்து சென்னை மார்க்கமாகவும், கும்மிடிப்பூண்டி மார்கமாகவும் இயங்கி வரக்கூடிய புறநகர் மின்சார ரயில்களின் மூலம், சென்னை மற்றும் கும்முடிபூண்டி பகுதிகளில் இயங்கி வர கூடிய தொழிற்சாலைகளுக்கு வேலைகளுக்கு சென்று வருவதும், கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ – மாணவிகளும், மற்றும் தினமும் அன்றாட தேவைகளுக்காக சென்னைக்கு சென்று வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தினம் பொன்னேரியில் இருந்து ரயில் மூலமாக தான், அதிக அளவில் சென்று வருகிறனர்.

இந்நிலையில், பொன்னேரி ரயில் நிலையத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து முதர்மண்டி கிடைக்கின்றது. அது மட்டும் இல்லாமல் நடைமேடைகளை சுற்றி, மக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாத அளவிற்கு, இரும்பு தண்டவாளங்களை இணைக்க கூடிய சிமெண்ட் தூண்கள், மற்றும் இரும்பு தளவாட பொருட்கள் பல இடங்களில் அப்படியே போட்டு வைக்கப்பட்டு உள்ளன. அவைகள், பல மாத கணக்குகள் கூட இல்லாமல், ஆண்டு கணக்கில் அதே இடத்தில் கிடப்பதால், ரயில்வே நடைமேடையை சுற்றியுள்ள புதர் பகுதிகளில் இருக்கக்கூடிய விஷ பாம்புகள் இந்த சிமெண்ட் தூண்களுக்கு இடையே வந்து புகுந்து விடுகின்றன.

பாம்புகள் வருட கணக்கில் அந்த இடத்தில் இருப்பதால், குட்டி போட்டு குட்டி போட்டு, பொன்னேரி நடைமேடையை சுற்றி நூற்றுக்கணக்கான விஷபாம்புகள் பெருகிப்போய் உள்ளன.
அதனால், பலமுறை இரவு நேரங்களில் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரக்கூடிய பொதுமக்கள் பாம்பை மிதிக்க கூடிய அபாயகரமான சூழ்நிலையும் ஏற்படுகிறது, அதனால் பயணிகள் உயிர் பயத்தில் அலறி அடித்து கொண்டு ஓடக்கூடிய சூழ்நிலை தான், தினம் தினம் நிலவுகிறது.
இரவு நேரங்களில் மட்டும் இல்லாமல் பகலில் கூட ரயில்வே நடைமேடை சுற்றி பாம்புகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் ரயில்வே நடைமேடையில் இருந்து வெளியே வரும் பயணிகள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பீதியிலேயே தினமும் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.


இதுகுறித்து, பொன்னேரி ரயில்வே நிலையத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிரொலி / 8939476777
