கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்தினாளிகளுக்கான நீச்சல் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திரு.ஆ.மகேஷ் என்பவர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் உயரிய ஊக்கத்தொகை ரூ.10 இலட்சம் பெற்றதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

அதேபோல், கிருஷ்ணகிரி சூலாமலை செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள், திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் முதலாம் இடம் பிடித்து வெற்றி, கோப்பை மற்றும் பதக்கம் பெற்றதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
உடன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜ முருகன், செயின்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி.போஸ், செயலாளர் லூர்துபோஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777
