மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயணல்ராஜ் தகவல்!
கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி, நெல்லை மாநகரம் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்பு நடைபெற்றது. இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை தலைவர் டாக்டர் எம்.முகம்மது அபூபக்கர், செயலாளர் டாக்டர் எம்.பிரபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டே.லயனல்ராஜ், கண் நீர் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, பாளை. ரோஸ் மேரி பெண்கள் கல்லூரி, திருநெல்வேலி சாரதா பெண்கள் கல்லூரி, இதய ஜோதி நர்சிங் கல்லூரி, நெல்லை நேசம் சுகாதார அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவியர் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு வாசகங்களைக் கூறினர்.

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 08.03.2026 தேதி முதல் 14.03.2026 தேதி வரை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “இலவசமாக கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை” செய்யப்படுகிறது. இதற்கான சிறப்பு பிரிவு நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முதல் தளத்தில் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் கண்நீர் அழுத்தப் பிரிவு மருத்துவர் பெட்சி கிளமெண்ட் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

திருநெல்வேலி செய்தியாளர்:
செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476777
