இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் அவர்கள் தலைமையேற்று பக்தர்கள் செல்லும் படகுகளை கொடியசைத்து பாதுகாப்புடன் சென்று வர வாழ்த்தி வழி அனுப்பி வைத்துதனர்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு பக்தர்கள் செல்லும் படகை கொடி அசைத்து வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் கூறுகையில்,
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழா 2026 பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பங்கேற்க இந்திய அரசு அனுமதியுடன் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 3996 பேர் விண்ணப்பித்து அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு இன்று காலை 7.00 மணிக்கு 90 விசைப்டகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகள் மூலம் செல்கின்றனர். மேலும் இப்பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பின்னர், பக்தர்கள் கச்சத்தீவு சென்று மீண்டும் இராமேஸ்வரம் வரும்வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை, தமிழக கடற்படை, மாவட்ட காவல்துறை, மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொளண்டு வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புடன் சென்று அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்று வரவேண்டும். பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி காவல் கண்காணிப்பாளர் மீரா அவர்கள், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் சின்னகுப்பன் ,கோபிநாத், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஹபிபூர் ஜம்மா , இராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜபார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : கோட்டைச்சாமி /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed