ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதில் கணக்கீட்டு காலத்தில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்களின் அடிப்படையில் 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் விவரம் பின்வருமாறு.

சிறப்பு தீவிர திருத்தம் 2026 – 19.12.2025 அன்றைய நிலவரப்படி வரைவு வாக்காளர் பட்டியல் விவரம் :
209.பரமக்குடி(தனி) சட்டமன்ற தொகுதியில் 1,12,797 ஆண் வாக்காளர்களும், 1,14,423 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 2,27,237 மொத்த வாக்காளர்கள் .

  1. திருவாடானை சட்டமன்ற தொகுதியில் . 1,36,038 ஆண் வாக்காளர்களும், 1,37, 379 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 2, 73, 439 மொத்த வாக்காளர்கள்.
  2. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில்,
    1,48,463 ஆண் வாக்காளர்களும்,
    1,53,511 பெண் வாக்காளர்களும்,
    13 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    3,01,987 மொத்த வாக்காளர்கள்.
  3. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில்,
    1.44.034 ஆண் வாக்காளர்களும்,
    1.44.626 பெண் வாக்காளர்களும்,03 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    2,88.663 மொத்த வாக்காளர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும்
5,41,332 ஆண் வாக்காளர்களும்,
5,49,939 பெண் வாக்காளர்களும்
55 மூன்றாம் பாலின வாக்காளர்களும்
10,91,326 மொத்த வாக்காளர்கள் .உரிமை கோரல், மேல் முறையீடு காலங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 17108 ஆண் வாக்காளர்களும்,19462 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 36,573 நபர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 2119 ஆண் வாக்காளர்களும், 2748 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 4870 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியவில் திருத்தங்கள் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து 10791 மனுக்கள் பெறப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்க்கண்ட விவரப்படி வாக்காளர்களில் எண்ணிக்கை உள்ளது :

சிறப்பு தீயிர திருத்தம் 2026 – 23.02.2026. அன்றைய நிலவரப்படி இறுதி வாக்காளர் பட்டியல் விவரம் :

  1. பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில்
    1,15,701 ஆண் வாக்காளர்களும்,
    1,17,714 பெண் வாக்காளர்களும்,
    18 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    2.33,433 மொத்த வாக்காளர்கள்
  2. திருவாடானை
    1,40,103 ஆண் வாக்காளர்களும்,
    1,41,997 பெண் வாக்காளர்களும்,
    21 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    2,82,121 மொத்த வாக்காளர்கள்.
  3. இராமநாதபுரம்
    1,52,412 ஆண் வாக்காளர்களும்,
    1,57,740 பெண் வாக்காளர்களும்,
    13 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    3,10,165 மொத்த வாக்காளர்கள் .
  4. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில்,
    1,48,105 ஆண் வாக்காளர்களும்,
    1,49,202 பெண் வாக்காளர்களும்,
    03 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    2.97,310 மொத்த வாக்காளர்கள் இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும்
    5,56,321 ஆண் வாக்காளர்களும்,
    5,66,653 பெண் வாக்காளர்களும்,
    55 மூன்றாம் பாலின வாக்காளர்களும்,
    11,23,029 மொத்த வாக்காளர்களும் உள்ளனர்.

வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர்களின் (வருவாய் கோட்டாட்சியர், இராமநாதபுரம் / பரமக்குடி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நல அலுவலர்) அலுவலகங்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின்(அனைத்து வட்டாட்சியர்கள். நகராட்சி ஆணையாளர், இராமநாதபுரம் / பரமக்குடி) அவலகங்கள் , வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இந்தி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.tn.gov.in , https://voterm.eci.gov.in – இல் பொதுமக்கள் அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஹபிபூர் ரகுமான், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இராஜா, தேர்தல் வட்டாட்சியர்கள் ஸ்ரீதரன் , அமர்நாத், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்
/ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed