ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு .

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த புதுமை புகழ் தூய செங்கோல் மாதா திருத்தலத் தேவாலயம் உள்ளது. அதில், தவக்காலத்தை முன்னிட்டு திருச்சிலுவை திருப்பாதை யாத்திரை அருள் தந்தை ரெமிஜியஸ் தலைமையில் நடைபெற்றது.

உலக அமைதிக்காகவும், பாவங்களுக்கு பரிகாரமாகவும், மக்கள் மத்தியில் நல்ல உறவும் மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காகவும், இதற்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்து அநீதி செயல்பாடுகள் நீங்கிட இந்த தவ நடை என்று சொல்லக்கூடிய பாதையாத்திரை நடைபெற்றது.

திருத்தலத் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரையில் ஆற்றங்கரையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தூய அமலோற்பவ மாதா கெபியில் நிறைவுற்றது. அதன் பிறகு நற்கருணை ஆராதனை நடைபெற்றது. அதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

செய்திகள் : கோட்டைசாமி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed