ஹரிஸ் வர்மா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நவீன புல்வெளி மைதானத்தை டத்தோ ஸ்ரீ பரந்தாமன், டத்தின் ஸ்ரீ மாயா திறந்து வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தலில் ஹரிஸ் வர்மா பதின்ம மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், பரமக்குடி, அரியனேந்தல் கிராமம் உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர் - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கு மெருகூட்டும் வகையில் நவீன புல்வெளி மைதானம் அமைத்து திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆலோசகர் நாகராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கல்பனாதேவி முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட டத்தோ ஸ்ரீ பரந்தாமன், ஸ்ரீ மாயா ஆகியோர் நவீன புல்வெளி மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
விழாவில் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவர் - மாணவியர்கள். பெற்றோர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் முனைவர் செளமியா தலைமையில் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்து இருந்தனர். பள்ளி முதல்வர் முனைவர் செளமியா நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் :
எதிரொலி / 8939476777
