மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில், 2024-25ம் ஆண்டு
மூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தலைவர் அறை, செயல் அலுவலர் அறை, பொறியாளர்கள் அறை, அலுவலக பணியாளர்கள் அறைகள், பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்ட அறை உள்ளிட்ட அறைகள் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், அலுவலகத்தின் மேல் பகுதியில் தமிழ் வாழ்க, சிறப்பு நிலை பேரூராட்சி வாடிப்பட்டி என்று பொறிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் உள்ளது. இந்த கட்டிடத்தில் கட்டுமான பணி முடிந்த நிலையில் நேற்று மதியம் 1.20 மணிக்கு மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

அப்போது பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காணொளி காட்சி திரையில் கண்ட பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன் பின் பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக் செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் குத்து விளக்கு ஏற்றினர். பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன் அலுவலக வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில், நல்லம்மாள், கார்த்திகா ராணி மோகன்,சரசு ராமு,பூமிநாதன்,கீதா சரவணன், பஞ்சவர்ணம், ஜ.குருநாதன், சுசீந்திரன், மீனா ஆறுமும் கடவுள், ப்ரியதர்ஷினி பஞ்சவர்ணம், வெங்கடேஷ்வரி மற்றும் அலுவலக பணியாளர்கள் தனலட்சுமி, கார்த்திக், நாகராஜ் உள்பட தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கட்டிடப் பணியினை முத்துக்குமார் கட்டிட பணி நிறுவனத்தார் செய்திருந்தனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed