இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் கிழக்கு கடற்கரை சாலை அருகாமையில் மிகவும் பிரசித்தி பெற்ற இறை இரக்கத்தின் நுழைவாயில் என்று அழைக்கக்கூடிய காரங்காடு புதுமை புகழ் புனித செங்கோல் மாதா திருத்தலம் உள்ளது. இத்திருத்திலத்தில் கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலம் தொடங்குவதை முன்னிட்டு சாம்பல் புதன் திருச்சடங்கு, சிறப்பு திருப்பலியும் அருள் தந்தை ரெமிஜியஸ் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல், சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் அருள் தந்தை செல்வகுமார், அருள் தந்தை பாக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் சாம்பல் புதன் திருச்சடங்கும் நடைபெற்றது. தொண்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் அருள் தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed