நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் துவங்கி, வானதி சீனிவாசன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமதி எஸ். விஜயதரணி, நடிகை குஷ்பூ போன்ற பல பெண் தலைவர்கள் உள்ள கட்சியில் ஒரு மாநில தலைவர் இப்படி பேசி இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் !

இல கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வகித்த பதவி அது, இந்த நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். பொது வெளியில் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தோழர் பெ.சன்முகம், தொல், திருமாவளவன், TTV தினகரன், செல்வப்பெருந்தகை, செங்கோட்டையன், கனிமொழி, ஜோதிமணி உட்பட பலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துனர். திரிஷாவை பொது வெளியில் அவதூறாக பேசியவர் பா.ஜ.க வின் மாநில தலைவர் என்பதால், த.வெ.க தலைவர் நடிகர் விஜய் இந்த நிமிடம் வரை எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.

மன்சூரலிகான் போன்றவர்கள் தன்னை பற்றி பொது வெளியில் பேசிய போது, அதற்கு கருத்து தெரிவித்த திரிஷா இந்த நிமிடம் வரை நயினார் நாகேந்திரன் தரமற்ற பேச்சுக்கு எதுவும் சொல்லவில்லை.
எது எப்படி இருந்தாலும் இப்படி பொது வெளியில் நயினார் நாகேந்திரன் பேசியதை வண்மையாக கண்டிக்கிறோம் !

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed