மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், வெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து, சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா.. ஓம் நமச்சிவாயா… என மனமுருகி வேண்டி கொண்டனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் தொழிலதிபர் மணி முத்தையா, எம் வி எம் பள்ளி தாளாளர் லயன் டாக்டர் எம் மருது பாண்டியன், நிர்வாகி வள்ளி மயில் மற்றும் பலர் செய்திருந்தனர்.
இதேபோல சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *