முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது…

மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிஐடியு (CITU), ஏஐடியுசி (AITUC), எல்பிஎப் (LPF) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) இணைந்து விடுத்த இந்த அழைப்பினை ஏற்று, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக, திருநகர் பகுதியில் உள்ள யூனியன் வங்கி முன்பு சிஐடியு மற்றும் வங்கி ஊழியர் சங்கத்தினர் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சிஐடியு மாநில தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் இந்த போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

அப்போது திடீரென அவர்கள் மதுரை-திருமங்கலம் சாலையை மரித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகரிலிருந்து திருமங்கலம் செல்லும் முக்கிய சாலை என்பதால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டதால் முன்னாள் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

மத்திய அரசை கண்டித்து வங்கியை முற்றுகையிட முயன்றவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோழவந்தானில், மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் முயற்சி 51 பேர் கைது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாய முன்னணி போராட்டம் நடத்தினர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ரயில் நிலையம் வந்தனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் ஆண்கள் 30 பேரும் பெண்கள் 21 பேரும் மொத்தம் 51 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed