உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், போத்தாபுரம் கிராமத்தில் தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி விவசாயிகளின் உரிமைகளை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தியாகத்தினை போற்றிடும் வகையில் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பழனி இனிப்புகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு பயன் தரும் மரக்கன்றுகளை வழங்கினார்,

மேலும், இந்த விழாவின் போது சங்கத்தின் நிர்வாகிகள், துணைத் தலைவர் அருண்குமார், துணைச் செயலாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், அங்கமுத்து, ஜே.சி.பி.பெரியசாமி, மணி நாயக்கர் மற்றும் மளிகை கடை சரசு ,குருமூர்த்தி, சின்னவன் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பொதுமக்கள் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர்,
கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777
