ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :
மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் , ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகி வரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் பல்வேறு போட்டி தேர்களுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள், நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இரயில்வே தேர்வு வாரியத்தின் குரூப் டி தேர்வில் பல்வேறு பணிகளில் உள்ள
22,195 காலிப்பணி இடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பாரர்களின் கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி , ஐடி ஐ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 01.01.2006 அன்று 18 வயது நிறையுற்றிருக்க வேண்டும். (மேலும், இளம் , முன்னுரிமை பிரிவிற்கு ஏற்ப வயதுவரம்பு சலுகை உண்டு.

இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் wwwtdow.in என்ற இணைய தள முகவரி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள். 02.03.2026 மேற்காணும் போட்டி தேர்விற்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில் வழிகாட்டும் மையத்தில் 16.02.2026 முதல் வார நாட்களில் 10.00 முதல் மதியம் 01.00 நடைபெற உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் – இளைஞிகள் தங்களது புகைப்படம் , சுய விவரங்களுடன் கலந்து கொள்ளவும். இப்பயிற்சி தொடர்பாக , ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567-230160 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
