ராமநாதபுரம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, அ.புத்தூர் ஊராட்சியை சேர்ந்த 88 வயதான மூத்தாட்டி பூரணம், விதவையான இவர் அதே ஊரில் தனது இரண்டு மகன்கள் உடன் வாழ்ந்து வந்தார். அவருடைய இரண்டு மகன்களும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைபாடு காரணங்களால் இறந்து போய்விட்ட நிலையில், யாருடைய ஆதரவும் இல்லாமல், அரசு தனக்கு வழங்கி வரக்கூடிய முதியோர் உதவித் தொகையை மட்டுமே, மாதா மாதம் பெற்று கொண்டு அதை வைத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருடைய வீடு கடந்த ஆண்டு பெய்த புயல் மாலையில் பலத்த சேதம் அடைந்து இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது.

ஆகவே, தனது வீட்டை ஊராட்சி நிர்வாகமோ அல்லது மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகளின் கருணையால், பேரிடர் நிதியிலிருந்து தான் உயிரோடு இருக்கும் சில காலத்திற்காவது அந்த வீடு தன் மீது விழுந்து விடாமல் இருக்கும் வகையில் பழுது பார்த்து கொடுக்க வேண்டும் என, பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். சமீபத்தில் 26/01/26 அன்று நடந்த கிராம சபை கூட்டத்திலும் நேரடியாக சென்று இது குறித்து கோரிக்கை வைத்தார். ஆனால், ஊராட்சி செயலாளர் மட்டுமில்லாமல் அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் கூட மூதாட்டியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதுதான் கொடுமை…
இந்த மூதாட்டி தனது கணவனை இழந்து மிகவும் போராடி, இரண்டு மகன்களை வளர்த்திருக்கிறார். தனது தாயின் இறுதி காலத்தில் காப்பாற்ற வேண்டிய மகன்களும், உடல் நலக்குறைவாழ் இறந்து போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட போராட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மூதாட்டிக்கு உதவுவதற்கு, ஒன்றிய அளவிலோ, மாவட்ட அளவிலோ மாநில அளவில் இருக்கக்கூடிய அதிகாரிகள் வந்து மனமிறங்கி ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் தான் இவரை பயனாளியாக சேர்த்து, அவர் கேட்கும் சொற்ப வீட்டு பழுது பார்க்கும் வேலையை செய்ய வேண்டியது இல்லையே.

அந்த கிராம சபை கூட்டத்தில் கூடியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளும், ஊர் முக்கிய பெரியோர்கள், பொதுமக்களும் மனசு வைத்தாலே அந்த மூதாட்டிக்கு உதவியை செய்துவிடலாம், இதற்காக ஊராட்சியில் ஒரு தீர்மானம் போட வேண்டுமா? அரசு திட்டத்தில் பயனாளியாக இவருடைய பெயரை சேர்க்க வேண்டுமா? அதன் பிறகு அந்த மூதாட்டியின் வீட்டை பழுது பார்க்க அரசு திட்டம் எதுவும் இல்லை என்ற பதில் வேறு சொல்ல வேண்டுமா…
ராமநாதபுரம் செய்தியாளர் : தனசேகரன் / எதிரொலி / 8939476777
