கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில், குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பொது மக்களுக்கான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள், என அடிபடை தேவைகளை நிறைவேற்றி தரவில்லை என கூறியும், பாமகவினர் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை , பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டு திமுகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எதிரொலி / 8939476777
