தமிழகத்தில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார். இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேருராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உணவு வழங்கும் பணியினை துவக்கி வைத்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து காலை உணவினை உட்கொண்டனர்.

மேலும், இந்த விழாவில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், திமுக நகர செயலாளர்கள் அஸ்லாம், வேல்மணி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ
எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed