தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற கூடிய சூழல் உள்ள இந்நிலையில், தமிழ்நாட்டு இன்றைய அரசியலை சூழ்நிலை தெரிந்து கொள்வதற்காக, சென்னையில், என்டிடிவி, NDTV Tamil Nadu summit என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது. அதில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களின் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்க்க நிலை குறித்தும், அவர்களுடைய அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும், இந்த நிகழ்ச்சி மூலமாக என்டிடிவி மக்களிடம் எடுத்து திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு தலைவர்களில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உங்கள் தொலைகாட்சிக்கு நேரடியாக பேட்டி அளித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் தற்போது புதியதாக அரசியல் கட்சி துவக்கி இருக்கும், விஜயை, என்டிடிவி நிகழ்ச்சிக்கு அழைத்தது. ஆனால் அவர் நேரில் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாறாக, விஜய் என்டிடிவி பத்திரிகையாளர்களை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்து பேட்டியளித்துள்ளார்.
அப்போதும் கூட அவர் அந்த பேட்டியை வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் என்டிடிவி பத்திரிகையாளர்கள் விஜயிடம் எடுத்த பேட்டியை தனியாக பேட்டியாக அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது என்டிடிவி சார்பில் தலைமை ஆசிரியர் ராகுல் கான்வால், அரசியல் பிரிவின் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோர் விஜயை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார்கள்.

அப்போது கூட, தனது பேட்டியை
விஜய் வீடியோவாக எடுக்க அனுமதிக்காத நிலையில், அவர்கள் 2 பேரிடமும் என்டிடிவின் நிர்வாக சிரியர் ஷிவ் அரூர் பேட்டி எடுத்தார். விஜய் உடனான சந்திப்பு எப்படி இருந்தது? அவர் என்ன சொன்னார் என்று விஜயிடம் பேட்டி எடுத்த ராகுல் கான்வால், வசுதா வேணுகோபால் ஆகியோரிடம் ஷிவ் அரூர் பேட்டி எடுத்தார்.

அரசியலில் அடிப்படை அறிவு இல்லாமல், அரசியல் கட்சி நடத்தும் விஜய்யையும், கேவலமான பாதையில் பயணிக்க துவங்கிவிட்ட ஊடக ஊடகத்தையும் கிழித்து தொங்க விட்டு இருக்கிறார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், விரைவில், வானொலியில் த.வெ.க தலைவர் விஜய், மௌனமாக அளித்த பேட்டி ஒளிபரப்பு ஆக உள்ளது ! பிரபல யூடியூப் சேனலுக்கு அரசியல் கட்சி துவங்கிய பிறகு சைகை முறையில் பேட்டி அளித்து சாதனை ! த.வெ.க தலைவர் விஜய்யை பேட்டி எடுத்தவர்களை பேட்டி எடுக்க தேடும் போட்டி ஊடகங்கள் !

இப்படி எல்லாம் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்ப்பு நமக்கு வருகிறது. காரணம், வெட்கம், மானம், சூடு, சுரணை, ஊடக தர்மம், தன்மானம், சுய மரியாதை என அனைத்தையும் இழந்து, டி.ஆர்.பி, பணம், விளம்பரம் போன்றவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் கேடு கெட்ட ஊடகங்கள் பற்றிய பதிவுதான் இது !
தொலைக்காட்சி உலகில் தேசிய அளவில் NDTV க்கு ஒரு மரியாதை இருந்து வந்துள்ளது.

பிரதமர், முதல்வர் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
சமீபத்தில் கூட தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என பலரும் கலந்து கொண்டனர். புதியதாக அரசியல் கட்சி துவங்கிய த.வெ.க தலைவர் விஜய் இவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. NDTV போன்ற ஊடகங்களை புறக்கணித்த விஜய்க்கு ஊடகங்களின் வலிமையை புரிய வைத்து இருக்க வேண்டும்.

ஆனால் அந்த குழு பனையூருக்கு வந்து கேமரா, பேனா எதுவும் இல்லாமல் ஒரு ரகசிய பேட்டி எடுத்து உள்ளதாக தெரிய வருகிறது. அனைத்து தொகுதியிலும் விஜய் முகம்தான் வேட்பாளர் முகம் என்று சொல்லும் முகம் தொலைக்காட்சி பேட்டிக்கு காட்ட தயங்குவது ஏன் ?

NDTV யினர் ரசிகர்கள் போல விஜய் உடன் புகைப்படம் எடுத்து கொண்டு, பேட்டியில் அவர் இதை சொன்னார், அதை சொன்னார் என்று, பேட்டி எடுத்ததைப் பற்றி பேட்டி கொடுத்த அதிசயம் நடைபெற்றது ! இந்த செயல் NDTV யின் கடந்த கால சாதனைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டது.

தமிழக தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் யூடியூப்கள் உட்பட, விஜய் ஆதரவு, விஜய் எதிர்ப்பு, விஜய் பற்றிய அவதூறு, விஜய் பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் என எல்லா வகையிலும், அதை வைத்து பணம் சம்பாதித்து வருகிறது ! லைவ் என்பதில் எதை எல்லாம் காட்ட வேண்டும் என்று ஒரு வரைமுறை கூட இல்லாமல், கிராமத்தில் எடுக்கும் கல்யாண கவரேஜ் போல ஆகிவிட்டது !

உண்மையான மக்கள் பிரச்சினைகள், அரசின் திட்டங்கள், அரசின் தவறுகள், தினம் தினம் நடைபெறும் பல்வேறு போராட்டங்கள் போன்றவைகளை விட விஜய் எழுந்து விட்டார் துவங்கி தூங்க சென்றார் வரை லைவ் போடுவது விஞ்ஞான வளர்ச்சி மற்றும் ஊடகங்கள் மரியாதை ஆகியவற்றின் கேடாகும் ! நல்ல வேளை பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் விஜய் இன்று வரை மதிக்கவில்லை, மதித்து இருந்தால் என்ன நிலை ?

உலகத்திலேயே கோடி கணக்கில் கார் வாங்கி அதன் வரியை கட்ட மறுத்து, அந்த வரியை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற ஒரு நபர் யாரையாவது கேள்விப்பட்டு இருப்பார்களா ? இப்படிப்பட்ட ஒருவர் வருமானம் இழந்து மக்களுக்காக சேவை செய்ய வருகிறார் என்பதை எப்படி நம்ப முடிகிறது ? விஜய்யை விமர்சனம் செய்தால் உடனே அவர்களை DMK அடிமை என்று சொல்லும் அரசியல் அறிவு பல த.வெ.க நண்பர்களுக்கு உள்ளது !

கரூர் மரணங்கள் முதல் விஜயின் பல தவறான செயல்களுக்கு A1 குற்றவாளி இதுபோன்றTRP க்காக கேவலமாக பிழைக்கும் ஊடகங்கள் மட்டுமே !
இன்றும் நம் நாட்டில் எத்தனையோ நேர்மையான, துணிச்சலான பத்திரிகையாளர்கள் பலர் போராடி இந்த துறையை காப்பாற்றி வருகின்றனர், அதை தவறான ஊடகங்கள் கைப்பற்றி விடக்கூடாது, அதை காப்பாற்ற வேண்டியது உண்மையான பத்திரிகையாளர்களின் கடமையாகும் !

தோழமையுடன், டி.எஸ்.ஆர். சுபாஷ், மாநில தலைவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ)
9444111494 / 7401117799

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed