மதுரை மாவட்டம் பரவை பேங்க் காலணி ஏ.பிளாக் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(46)இவர் பரவை மெயின்ரோட்டில் நகைகடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
இச்சம்பவதன்று வழக்கம் போல் காலையில் நகை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சிசிடிவி கேமரா வயர்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கடையின் பின்புறம் சுவரில் சுமார் 2 அடி அளவில் துளையிட்டு இருந்தையும் கண்டு நகைகடை உரிமையாளர் சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசில்
கொடுத்த புகாரின்
பேரில், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில், நகை கடையை பின் பக்கமுள்ள சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்த போது கடையில் இருந்த அலரம் சத்தம் எழப்பியதால் கொள்ளையர்கள் தப்பியோடி உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதனால், நகைகடையின் உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையில் இருந்து தப்பி உள்ளது.

இதையெடுத்து தடவியல் நிபுணர்கள் வரைவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரை செயலாளர் : சுரேஷ்
