இன்று ஜனவரி 26 ம் தேதி, (திங்கள்) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (TUJ) தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்வு மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர்,
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வம்சத்தை சேர்ந்தவரும்,
அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IJU) தேசிய குழு
உறுப்பினருமான, இளைய கட்டபொம்மன் அவர்கள் முன்னிலையிலும், பத்திரிக்கையாளர் குரலின் சிறப்பாசிரியரும், எழுத்து செல்வர், கலைமாமணி, முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அதை தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், இயக்குநர், நடிகருமான முனைவர் யார் கண்ணன் அவர்கள் 2026 ம் ஆண்டின் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அரக்கோணம் கவிஞர் மு. இஸ்மாயில், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் கலைமாமணி வி. பிரபாகர், சங்கத்தின் உயர்மட்ட குழு உறுப்பினரும், மூத்த பத்திரிக்கையாளருமான சசிகலாதேவி அவர்களும், ஆன்மீக புரட்சியாளர் வடபாதி ஆதீனம், தமிழ்நாடு அரசு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கௌரி அசோகன் அவர்கள் மத்திய அரசின் திரைப்பட தனிகை குழு உறுப்பினர் விருகை வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிகழ்வின் துவக்கத்தில் சமாதான புறா பறக்க விடப்பட்டது.

சென்னை செய்தியாளர்கள்: பார்த்திபன் & ஜோதி

