ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சா.கந்தசாமி அவர்கள் இன்று ஆனக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு அணிவிப்பு மரியாதை ஏற்று கொண்டார். பின்னர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

பின்னர், அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள், உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அவர்கள் சார்ந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றுவதற்காக
141 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

பின்னர், மக்களுக்கு அழகு திட்ட உதவி வழங்கும் நிகழ்வாக வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர்கள் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, உள்ளிட்ட பல துறைகளின் வாயிலாக வேளாண்மை உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உட்பட மானிய கடன்களும், வீட்டுமனை பட்டாக்களும் வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், அம்மாபேட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கீதாஞ்சலி சிபிஎஸ்இ பள்ளி, பெருந்துறை கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆகிய ஏழு பள்ளிகளை சேர்ந்த 562 மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமி அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி வாழ்த்தினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், உதவி ஆட்சியர் காஞ்சன் சவுத்ரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தேன்மொழி, ரமேஷ் கண்ணன், லோகநாதன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் மற்றும் அனைத்து உயர் அலுவலர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு செய்தியாளர் : கிருஷ்ணன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed