ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது இலியாஸ் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி குழந்தைகளுக்கு பரமக்குடி வி.ஆர். புரோமோட்டர்ஸ் மார்க்கெட்டிங் இயக்குனரும், தன்னம்பிக்கை பயிற்சியாளர் என். சிவசுப்பிரமணி விளையாட்டு சாதனங்களை வழங்கி சிறப்பித்ததுடன் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் மனப்பயிற்சி , ஆரோக்கியம் சம்மந்தமாக விளக்கமாக எளிதாக எடுத்துரைத்தார். பள்ளி கல்வி குழு உறுப்பினரும், சமூக ஆர்வலர் முகம்மது ஹபீப் , பள்ளி கல்விக் குழு உறுப்பினர்கள் அயுப்கான், முகமது இத்ரீஸ் , தர்வேஸ் மைதீன் , யாசீன், ரஜாக் , சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை மாரியம்மா தலைமையில் ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்
. / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed