கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்குவாரி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டனர். இது தொடர்பாக, காவல்துறை செய்தியாளர் மற்றும் குவாரி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி, அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் சுப்பையா பாண்டியன், மாநில பொருளாளர் திண்டுக்கல் ராமகிருஷ்ணன், திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் பழனிச்சாமி, பொருளாளர் சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் குமரேசன், துணைத் தலைவர் சையது இப்ராஹிம், உதவி செய்தி மக்கள் தொடர்பாளர் பாலச்சந்திரன், மகளிர் அணி சார்பில் சந்திரகாந்தா, கரூர் மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும், பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். செய்தியாளர்களை தாக்கிய குவாரி உரிமையாளர்கள் மீது குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து செய்தியாளர்கள் தாக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பத்திரிக்கையாளர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். குளித்தலை சம்பவத்தில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள் மீது குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க தவறினால்,
எங்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் அகில இந்திய பத்திரியாளர் சங்கத்துடன் இணைந்து செயலாற்றி வரும் நிலையில், இந்த பிரச்சினை குறித்து, அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் வாயிலாக இந்திய பிரஸ்கவுன்சில் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும், அதன் மூலம் இந்த பிரச்சனையை, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரித்தார்.

P.G.பாலகிருஷ்ணன்
எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed