விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கண்ணன் முன்னிலையில், நகர் நல அலுவலர் டாக்டர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். துறைவாரியாக ஊழியர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தங்களது துறையில் உள்ள குறைகள், செய்ய வேண்டிய நிவர்த்திகள் குறித்து துறைவாரியாக விவரம் கேட்டறிந்தார்.

நகராட்சி ஊழியர்களிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும்போது,”
முதன்முறையாக உங்களை சந்தித்து பேசுகிறேன். மக்களுக்கு உண்மையாக உழையுங்கள். ஊழல் அற்ற ஆட்சி இது. மக்களிடம் நாங்கள் எத்தனையோ குறைகளை தீர்த்து வைப்பதாக கூறி வந்தாலும், அதை நேரடியாக செயல்படுத்துவது நீங்கள் தான். எனவே முன்பு நீங்கள் சிலருக்கு கட்டுப்பட்டு இருந்திருக்கலாம். இப்போது சுதந்திரமாக நீங்கள் செயல்படுவதற்கு 60 தினங்கள் ஆகிவிட்டது.

சுதந்திரமாக தைரியமாக செயல்படுங்கள். நல்லாட்சி என்று பேசுவது உங்களால் தான். இப்போது மிகப்பெரிய மாற்றம் துவங்கிவிட்டது. இது மக்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. தேடிச்சென்று குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்யுங்கள். அதுவே நல்லாட்சிக்கு வழிவகுக்கும்.” -இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் பேசினார்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி. /8939476777
