நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் வடக்குத்தெருவைச் சேர்ந்த சிவபிரகாஷ் (27) என்பவரின் மனைவி லட்சுமி (24), பி.இ. பட்டதாரி ஆவார்.
நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தகவலறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

லட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், நேற்று லட்சுமியின் தந்தை முருகன், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உயிரிழப்பு குறித்து முழுமையான மற்றும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வடசேரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed