குடியாத்தம் செரு வங்கி அண்ணா நகர் பவன் உள் விளையாட்டு அரங்கத்தில் பாபாசாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கல்வி அறக்கட்டளை தலைவர் இரா. பாஸ்கர் தலைமை தாங்கினார். இரா. முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். கருத்தியல் தலைவர்கள் புலவர் சுப்ரமணி ஆசிரியர்கள் ஏகாம்பரம் சம்பத் கண்ணன் கோடீஸ்வரன் முன்னிலை வகித்தனர். இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வழக்கறிஞர் பாலகுமரன் செந்தமிழ் சரவணன் வாழ்த்துரை வழங்குகினர்.

விழா ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக தயாளன் நீதித்துறை ராஜா ஏற்பாடு செய்தார்கள். உடன் பாபா சாகேப் டாக்டர்.B.R. அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் குப்புசாமி அமிர்தலிங்கம் ஜம்புநாதன் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் பேங்க் மேலாளர் ஓய்வு சிவமணி நன்றி கூறினார்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
