திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சர்வதேச யோகா தினம் – 2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழகப் பாண்டியன், பிரேம்குமார், முகமது சுபேர், சிவக்குமார் மற்றும் விப்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சர்வதேச யோகா தினம் – 2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிவகுமார் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சென்னை அஞ்சல் மண்டலம் வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை, யோகாவின் சிறப்பையும், இந்தியாவின் தொன்மையான பண்பாட்டு மரபையும் உலகிற்கு எடுத்துரைக்கும் சிறப்புமிக்க அஞ்சல் வெளியீடாகும். இந்த அஞ்சல் உறை, ஒரு சாதாரண நினைவு வெளியீடாக மட்டுமல்லாமல், யோகா என்பது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் முழுமையான வாழ்க்கை முறையாகும் என்ற கருத்தை கலைநயத்துடன் வெளிப்படுத்துகிறது.

சிறப்பு அஞ்சல் உறையின் அமைப்பு
உறையின் மேற்பகுதியில் “International Yoga Day – 21 June 2026” என்ற தலைப்பு தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
வலது மேற்புறத்தில் ₹500 மதிப்புடைய சர்வதேச யோகா தின அஞ்சல்தலை ஒட்டப்பட்டுள்ளது. அதனுடன், International Yoga Day – 21 June 2026 என்ற சிறப்பு ரத்து முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை, அன்றைய நாளில் மட்டுமே பயன்படுத்தப்படும் நினைவு முத்திரையாகும்.

இந்த உறையில் “YOGA” என்ற பெரிய எழுத்துகளுடன் பல்வேறு யோகாசனங்களைச் செய்யும் மனிதர்களை காகித வடிவமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகும். உறையைத் திறக்கும் போது, யோகாசன உருவங்கள் முப்பரிமாண தோற்றத்தில் உயர்ந்து நிற்பது போல காட்சியளிக்கின்றன என்றார்.
செய்திகள் ; விஜயகுமார் எதிரொலி / 8939476777
